Photos

March 31,2022


மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் மின்னணு மின் கொள்முதல் வலைத்தளத்தை (http://eproc.elcot.in/) தொடங்கி வைத்தார். இதன் மூலம் வன்பொருட்களை, எளிதாகவும், விரைவாகவும், குறைந்த விலையிலும் கொள்முதல் செய்ய முடியும்.

March 30,2022


தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 1370 புத்தாக்கம் செய்யப்பட்ட மேசை கணினிகளை சென்னை பெருநகர மாநகராட்சியின் 70 பள்ளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக, 6 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

March 29,2022


சென்னை, பெருங்குடி, உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

December 10,2021


மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் நுண்ணரங்கு '21 - செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகைப்பாய்வு மாநாட்டினை துவக்கி, இ-சேவை மையங்களில் ஆதார் அட்டையுடன் செயல்படுத்தப்பட்ட கட்டண முரையையும் துவக்கி வைத்தார்.

December 06,2021


நிர்வாக வசதிகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளை தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் மின்னனு ஆக்கம் செய்யும் திட்டத்தை குமரி மாவட்டத்தில் முன்னோடியாக நிறைவேற்ற சோதனை முறையில் செயல்படுத்துவத்தை ஏற்றகோடு ஊராட்சியில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் பார்வையிட்டார்.

November 30,2021


தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-டிஸ்ட்ரிக்ட் மேலாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அதில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் பங்கேற்றார்.

November 26,2021


தொழில்நுட்பவியல் துறை சார்பாக நடைபெற்ற CONNECT 2021 மாநாட்டிற்கு வருகை தந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் வரவேற்றார்.

November 26,2021


மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் CONNECT 2021 கண்காட்சியை திறந்து வைத்தார்.

November 26,2021


CONNECT 2021 மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுடன்.

November 26,2021


மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் CONNECT 2021 மாநாட்டில் துவக்க உரையாற்றினார்.

November 26,2021


CONNECT 2021 மாநாட்டில், “தமிழ்நாடு தரவு மையக் கொள்கை, 2021” கையேட்டினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.

November 26,2021


CONNECT 2021 மாநாட்டில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை - சென்னை கணிதவியல் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.